×

உ.பி. மாநில போலீசாரை கண்டித்து திருவள்ளூர் வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:  உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பலியான பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி சென்றார். அப்போது காவல்துறையினர் அவரை வழிமறித்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். இதனைக் கண்டித்து வடக்கு  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தில் மாநில ஓபிசி செயலாளர் ஜே.கே.வெங்கடேசன், அருள்மொழி, பிரபாகரன், டி.வடிவேலு, வக்கீல் டி.எஸ்.இளங்கோ, வி.இ.ஜான்,  புருஷோத்தமன், ஒய்.அஸ்வின்குமார், சரஸ்வதி,  பேரம்பாக்கம் எஸ்.திவாகர், சதீஷ், ராஜா, செல்வகுமார், லோகநாதன் மற்றும் நிர்வாகிகள்  கலந்துகொண்டனர். பொன்னேரி;  மீஞ்சூர் _ திருவொற்றியூர் நெடுஞ்சாலை பட்டமந்திரி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்  மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை  யில் நடந்தது ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மீஞ்சூர் முகமது தாரிக் முன்னிலை வகித்தார். சாலைமறியலில் உத்தரப்பிரதேச போலீசாரை கண்டித்து   கண்டன கோஷங்கள் எழுப்பினர். மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.    Tags : UP Tiruvallur North and South District Congressmen ,state police , UP Condemning the state police Tiruvallur North, South District Congress Demonstration
× RELATED மராட்டிய மாநில காவல்துறையில் இன்று புதிதாக 381 பேருக்கு கொரோனா