×

படைத்துறை தொழிற்சாலைகளை கார்பரேஷனாக மாற்ற எதிர்ப்பு 12ம் தேதி முதல் தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

ஆவடி: படைத்துறை தொழிற்சாலைகளை கார்பரேஷனாக மாற்றும் மத்தியரசின் முடிவை கண்டித்து அனைத்து படைத்துறை தொழிலாளர்கள்  சங்கங்கள் சார்பில் வரும் 12ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தபோராட்டம் நடத்துகின்றனர்.  கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி மத்தியஅரசு  படைத்துறைகளை கார்பரேஷனாக மாற்ற முடிவெடுத்துள்ளது. இதற்கு, படைத்துறை  தொழிற்சாலை அனைத்து தொழிலாளர்கள் சங்கங்கள் மற்றும் அசோஷியசன் கூட்டு போராட்டக்குழு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.  மேலும், படைத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும்  முடிவினை கைவிடக்கோரி பிரதமர், ஜனாதிபதி, ராணுவ அமைச்சர் உள்பட   பல அரசியல் கட்சி தலைவர்களிடமும் கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை.  இதனைஅடுத்து, மத்திய அரசின் போக்கினை கண்டித்து  படைத்துறை தொழிற்சாலை அனைத்து  சங்கங்கள் மற்றும் அசோஷியன்களின் சார்பாக படைத்துத்றை உடை தொழிற்சாலை, டேங்க் பேக்டரி தொழிற்சாலை, இன்ஜின் பேக்டரி மற்றும்  திருச்சி,  அரவங்காட்டில் உள்ள பாதுகாப்பு தொழிற்சாலைகள் ஆகிய நிறுவனங்களின் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், சுமார்  5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் இணைந்து வரும்  அக்டோபர் 12ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட  உள்ளனர்.

இந்நிலையில், ஆவடி படைத்துறை தொழிற்சாலை அனைத்து சங்கங்கள் மற்றும் அசோசியேஷன்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் அகில இந்திய  பாதுகாப்பு தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.குமார் தலைமையில்  ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் உண்ணாவிரதம்  நேற்று  நடந்தது. இதில், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஏ.முகம்மது மீரா, டி.சதாசிவம், எம்.மணி, கே.கிருபாகரன் உள்ளிட்டோர்  கண்டன  உரையாற்றினர். இதில், 300க்கு மேற்பட்ட படைத்துறை உடை தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, என்ஜின் பேக்டரி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து  போராட்ட குழுவினர் கூறியதாவது:- நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலையை கார்ப்பரேட்களுக்கு வழங்குவதால்  நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறும் வாய்ப்புள்ளது. இதனை கண்டித்து, அக்டோபர் 12ந்தேதி நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரம்  தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்திலுள்ள 6 பாதுகாப்புத்துறை தொழிற்சாலை உள்பட நாடு முழுவதும் உள்ள 41  பாதுகாப்புத்துறை தொழிற்சாலை தொழிலாளர்கள் சார்பாக 41 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்பவுள்ளோம் என்றனர்.

Tags : strike ,conversion ,corporations , Opposition to the conversion of military factories into corporations Workers from the 12th Indefinite strike
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து