×

இன்று தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர பேரூர் திமுக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அறிவிப்பு

திருவள்ளூர்:  திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சாமு நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் தெற்கு மாவட்ட  திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று  (3 ஆம் தேதி)  மாலை 4மணியளவில் திருவள்ளூர் - காக்களூர்  நெடுஞ்சாலையில் உள்ள ஆர்.எம்.கெஸ்ட் ஹவுசில் மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு எம்எல்ஏ க்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் சி.ஜெரால்டு, இ.பரந்தாமன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாவட்ட  நிர்வாகிகள் நடுகுத்தகை ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிதரன், மு.ராஜேந்திரன், ம.ராஜி, ஜெ.ஜெய்மதன், ஜி.ஆர்.திருமலை, கே.யு.சிவசங்கரி  ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்கிறார். எனவே அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முப்பெரும் விழா கூட்டம் குறிக்கும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதால்  திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆவடி சா.மு.நாசர் கூறியுள்ளார்.    Tags : Southern District Union ,Avadi Samu Nasser ,Announcement ,Nagar Perur DMK Secretaries' Consultative Meeting , Today Southern District Union, City Perur DMK Secretaries Consultative Meeting: Announcement by District Secretary Avadi Samu Nasser
× RELATED விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்ததும் ஒரு...