×

முககவசம் அணியாமல் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்

* கண்டுகொள்ளாத அதிகாரிகள் * அச்சத்தில் பொதுமக்கள்

பொன்னேரி:  கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதை கட்டுப்படுத்த  தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  கடந்த மாதத்தில் இருந்து தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது, இதில் பொதுமக்கள் கட்டாயமாக  மாஸ்க் அணிய வேண்டும். சமூக  இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு கடுமையாக உத்தரவிட்டுள்ளது.  அதனை 50% பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். 50  %சதவீதம் பேர் இதனை கண்டு கொள்ளவில்லை. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.  இங்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு  தினந்தோறும் காலையில் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தூய்மை பணியில் ஈடுபடும்போது முககவசம்  அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அரசு உத்தரவை  காற்றில் பறக்கவிட்டுவிட்டு  பணியாற்றி வருகின்றனர்.

அரசு அதிகாரிகளும் அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  சாதாரண மக்கள் முககவசம் அணியாமல் சாலையில் செல்லும்போது அவர்களைப்பிடித்து அபராதம் விதிக்கும் அதிகாரிகள் அரசு உத்தரவை மீறும்  தூய்மைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அல்லது தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை  தரவில்லையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுசம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி இயக்குனர், உரிய அறிவுறுத்தலின்பேரில் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் கொரோனாவை தடுக்கும் வகையில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என எந்த பாரபட்சமுமின்றி அரசின் நடைமுறைகளை கடுமையாக  கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.      



Tags : Cleaning staff , Works without wearing a mask Cleaning staff
× RELATED சுதந்திர தினவிழாவில் தூய்மை...