×

நவராத்திரியை முன்னிட்டு கைவினை பொருட்கள் கண்காட்சி

சென்னை,: நவராத்திரியை முன்னிட்டு கைவினை பொருட்கள் கண்காட்சி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள  சங்கரா மண்டபத்தில் வரும்  15ம் தேதி வரை நடைபெறுகிறது.  தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களை  சேர்ந்த நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் படைப்புகள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து வகை கொலு பொம்மைகள்,  பனை ஓலை மற்றும் பருத்தி இலை ஓவியம், உலோக நகைகள், பெண்களுக்கான ஆடைகள், பித்தளை கலைப்பொருட்கள், பரிசு பொருட்கள் மற்றும்  சர்வதேச அளவில் அறியப்பட்ட கைவினை பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. கவர்ச்சிகரமான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.Tags : Exhibition ,eve ,Navratri , On the eve of Navratri Handicrafts Exhibition
× RELATED எம்பி திருநாவுக்கரசர் பேட்டி...