ராகுல் தவறி விழுந்திருக்கலாம்: சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

திருவில்லிபுத்தூர்: ‘ராகுல் காந்தி தானாகவே தவறி விழுந்திருக்கலாம்’ என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார்.அரசு கலைக்கல்லூரி ஆரம்பிக்க இடம் தேர்வு செய்வதற்காக, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூருக்கு  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று  வந்தார். ராஜபாளையம் சாலையில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 45 ஏக்கர் இடத்தை பார்வையிட்டார். பின்னர் அந்த  இடத்தை கல்லூரிக்கு தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியை சுட வேண்டும். போலீசார்  விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் ராகுல்காந்தி அங்கு சென்று வம்பு இழுக்கக்கூடாது. காவல்துறையினர் ராகுல்காந்தியை  தடுத்து இருப்பார்கள். அவர் தவறி விழுந்து இருக்கலாம்.

வரும் 6ம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு தலைமை அவசர அழைப்பு ஒன்றும் விடுக்கவில்லை. பணி இருக்கிறது என்று கூறினால் கூட்டத்திற்கு  செல்லாமல் இருந்து கொள்ளலாம். அதிமுகவை சுற்றி என்னதான் மாவாட்ட நினைத்தாலும் ஒன்றும் நடக்காது. அதிமுக கடல் போல் பொங்கத்தான்  செய்யும். கடைசியாக அமைதியாகி விடும். துணை முதல்வரை புறக்கணிக்கவில்லை. பணியின் காரணமாக அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல்  இருந்திருக்கலாம். அதிமுக மிகப்பெரிய ஆலமரம். இதில் யார் பெரிய விழுது, யார் சிறிய விழுது என பார்க்க முடியாது. அதிமுகவை விட்டு யாரும்  எங்கு செல்ல மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>