கடலில் விழுந்து மாயமான மீனவரை மீட்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்றபோது படகில் இருந்து தவறி கடலில் விழுந்து காணாமல் போன தங்கச்சிமடம் மீனவர்  கார்சனின் உடலை தேடிச்சென்ற மீனவர்கள், இந்திய கடல் பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் எல்லையில் இலங்கை  கடற்படை கப்பலில் ரோந்துப்பணியில் இருந்த அதிகாரிகளிடம் மாயமான தமிழக மீனவர் குறித்து தகவல் தெரிவித்தனர். அத்துடன் இலங்கை கடல்  பகுதிக்குள் தேடிச் செல்ல அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு கடற்படை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.

கடலில் தவறி விழுந்து  2 நாட்கள் ஆன நிலையில், மாயமான மீனவர் உயிருடன் இருப்பாரா என்ற சந்தேகமும் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இதையடுத்து ராமேஸ்வரத்தில் மீனவர் பிரதிநிதிகளின் அவசர கூட்டம் போஸ் தலைமையில் ேநற்று நடந்தது. கூட்டத்தில், கடலில் விழுந்து  காணாமல் போன மீனவரை இலங்கைக்குள் சென்று தேடுவதற்கு2படகுகள் மற்றும் 14 மீனவர்களுக்கு அனுமதி வழங்கவும், மத்திய, மாநில அரசுகள்  தலையிட்டு மீனவரை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.  இதைதொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல்  காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

Related Stories:

>