×

அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்தது

மும்பை,: அந்நியச்செலாவணி கையிருப்பு கடந்த செப்டம்பர் 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 301.7 கோடி டாலர் சரிந்து, 54,202.1 கோடி  டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 337.8 கோடி டாலர் உயர்ந்து,  54,503.8 கோடி  டாலர் என்ற வாழ்நாள் உச்சத்தை எட்டியிருந்தது.

 தற்போது கையிருப்பு சரிவுக்கு வெளிநாட்டு கரன்சி மதிப்பு குறைந்ததே முக்கிய காரணம். வெளிநாட்டு கரன்சி மதிப்பு 152.3 கோடி டாலர் சரிந்து  49,994.1 கோடி டாலராக இருந்தது. தங்கம் கையிருப்பு 144.1 கோடி டாலர் சரிந்து 3,599.9 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் கையிருப்பு 460.8  கோடி டாலராகவும் சரிந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tags : Forex The stock fell
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...