×

கொரோனா பீதியால் பயணிகள் இல்லை ஒரேநாளில் 92 விமானங்கள் ரத்து: சென்னை விமான நிலையமே வெறிச்சோடியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து விமானப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், சென்னைக்கு வரும் விமான பயணிகள்  எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சென்னையிலிருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து செல்லும் விமான பயணிகள் எண்ணிக்கை நேற்று 3 ஆயிரமாகவும், அதைப்போல்  வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 2,300 ஆகவும் குறைந்துள்ளது. அதோடு சென்னை விமான நிலையத்தில் நேற்று போதிய பயணிகள் இல்லாமல் மும்பை, டில்லி,  ஐதராபாத், அகமதாபாத், கொச்சி, இந்தூர், அந்தமான், புவனேஸ்வர், மதுரை, திருச்சி, கோவா உள்ளிட்ட 92  உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னையிலிருந்து மும்பை 5 விமானங்கள், டில்லி 4 விமானங்கள், மதுரை  4, கோவை 4,  அந்தமான் 4, கொச்சி 3, ஐதராபாத், 3, திருச்சி 2, விஜயவாடா 2, மற்றும் கோவா, அகமதாபாத், விசாகப்பட்டிணம், திருவனந்தபுரம், புனே, கவுகாத்தி உள்ளிட்ட 46  விமானங்கள், அதைப்போல் சென்னைக்கு வரவேண்டிய 46  உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 92 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் நேற்று ரத்து செய்யப்பட்டன. இவைதவிர சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று 52 வருகை விமானங்கள், 51  புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 103 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவைகளும் போதிய பயணிகள் இல்லாமல் காலியாகவே  இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை விமான நிலையமே வெறிச்சோடிக் கிடக்கிறது….

The post கொரோனா பீதியால் பயணிகள் இல்லை ஒரேநாளில் 92 விமானங்கள் ரத்து: சென்னை விமான நிலையமே வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Tags : Corona ,Chennai airport ,Chennai ,2nd wave of corona virus ,Tamil Nadu ,Corona panic ,
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!