பினராய் புதுமை ஒரு நாளைக்கு 500 பேருக்கு வேலைவாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரள  முதல்வர் பினராய் விஜயன், திருவனந்தபுரத்தில் நேற்று அளித்த பேட்டியில், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான புதிய  திட்டத்தை அறிவித்தார். அவர் தனது பேட்டியில் கூறுகையில், ‘‘கேரளாவில் வரும்  2021 ஜனவரி 8 வரை, நாளொன்றுக்கு சராசரியாக 500 என 100  நாட்களில் 50 ஆயிரம்  வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஆனால், 100 நாட்களில் 95 ஆயிரம்  வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன்  நோக்கமாகும்.

இந்த வேலைகள்  உருவாக்கம் பகிரங்கமாக கண்காணிக்கப்படும். உருவாக்கப்பட்ட வேலைகள் பற்றிய  விவரங்கள், புதிதாக வேலை ெபறுபவர்களின்  பெயர் மற்றும் முகவரி 2  வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும்.தொழில் (23,100), அரசு  (18,600) மற்றும் கூட்டுறவு (17,500) ஆகிய 3 முக்கிய துறைகளில்  பெரும்பாலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.  மேலும், ‘குடும்பஸ்திரீ’ அரசு  திட்டத்திலும் 15 ஆயிரத்து 441 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்,’’ என்றார்.

Related Stories:

>