×

பூகம்பமாய் வெடிக்கும் அதிமுக உட்கட்சி பூசல்; 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா அல்லது ரத்தாகுமா?: தொண்டர்கள் குழப்பம்

* அதிமுக-வில் உள்கட்சி குழப்பம் தீவிரம்
* எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீா் ரத்து

சென்னை: அதிமுக-வில் உள்கட்சி குழப்பம் தீவிரமாக சூடுபிடிக்கும் நிலையில் எம்.எல்,ஏ.க்கள் கூட்டம் திடீா் ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்.7ம் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாக அக்கட்சி கூறியிருந்தது. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு ஒருநாள் முன்பே எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என தலைமைக் கழகம் தெரிவித்திருந்தது. மதியம் 12 மணி அளவில் அதிமுக அதிகாரபூா்வ டிவிட்டரில் அறிவிப்பு வெளியானது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி இடையே சமாதானம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. காந்தி பிறந்தநாள் நிகழ்வில் சந்தித்துக் கொண்டபோதும் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பேசாதது நிர்வாகிளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்செல்வம் பெரியகுளம் கிளம்பிச் சென்ற நிலையில் டிவிட்டர் பக்கத்தில் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா என கேள்வி எழுந்தள்ளது. முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை மீண்டும் அறிவிக்க பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடர்பான அறிவிப்பை ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் கூட்டறிக்கையாக வெளியிடுவர் என கூறப்பட்டிருந்தது. தன்னிசையாக இதை அறிவித்தது யார் என பன்னீர்செல்வம் தரப்பு கேள்வி எழுப்பு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பை ஓசையின்றி அதிமுக வின் ஐடி பிரிவு நீக்கியுள்ளது.


Tags : infighting ,AIADMK ,Chief Ministerial , AIADMK, Intra-Party Conflict, Chief Ministerial Candidate
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...