×

பெண் விடுதலைக் கட்சி தலைவர் சபரிமாலா தலைமையில் போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது

தருமபுரி: பெண் விடுதலைக் கட்சி தலைவர் சபரிமாலா தலைமையில் போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்திய சபரிமாலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். காலி பணியிடங்களில் 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். 7 ஆண்டுகளாக பணி தரவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : protesters ,Women Liberation Party ,Sabarimala , Arrested, Sabarimala
× RELATED திரிணாமுல் அதிருப்தி தலைவர் சுவேந்துவை வளைக்க பாஜ பேச்சுவார்த்தை