மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாள்: காந்தியின் திருவுருவப்படத்திற்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை.!!!

சென்னை: இந்தியாவின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், காமராஜ், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் காந்தியின் படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு கட்சி தலைவர்களும் காந்தியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காமராஜ் நினைவு நாள்:

இதனைபோல், மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 46-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு கீழ்  வைக்கப்பட்டுள்ள காமராஜ் திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, காமராஜரின் நினைவிடத்தில்  மலர் வளையம் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு கட்சி தலைவர்களும் காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதையும்,  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories:

>