திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த ஆ.ராசா, எம்.பி., துணைப் பொதுச்செயலாளராகவும்- தங்க. தமிழ்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்கள் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக, ஏற்கனவே கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்.பி.,யுடன், திமுக சட்டதிட்ட விதிகளின்படி திண்டுக்கல் ஐ.லியோனி, முனைவர் சபாபதி மோகன், ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>