உ.பி.யில் 14 வயது சிறுமி கொடூரக் கொலை; தொடரும் பலாத்கார கொலைகளால் பெண்கள் அச்சம்: ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடி

பாதோகி: ஹத்ராஸ் இளம் பெண் கொடூர கொலையால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் உத்திரபிரதேசத்தில் மேலும் 2 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிராயதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் கடந்த 14-ம் தேதி 19 வயது பட்டியலின இளம்பெண் ஒருவர் 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு பட்டியலின பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது.

பல்ராம்பூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை நேற்று மாலை கண்முடித்தனமாக தாக்கிய ஒரு கும்பல் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அந்த பெண் லக்னோ அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். இளம்பெண் கொலை தொடர்பாக சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர். இதேபோல் உத்திரப்பிரதேச மாநிலம் பாதோகி என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கொடூரமாக அடுத்து கொல்லப்பட்டுள்ளார்.

சிறுமி கொலை குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொடூர பாலியல் பலாத்கார நிகழ்வுகளால் ஆதித்யநாத் அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Related Stories:

>