×

இலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலில் விடுவிப்பு

ராமேஸ்வரம்: பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக் ஜலசந்தி கடலில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சிறைபிடித்தனர். அவற்றில் 86 மீனவர்கள் இருந்தனர். இவர்களை நடுக்கடலிலேயே விசாரணை செய்த கடற்படையினர் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். இலங்கை கடற்படை உயர் அதிகாரிகளின் உத்தரவை தொடர்ந்து, 86 மீனவர்களும் யாழ்ப்பாணம் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படையினரிடம் நடுக்கடலிலேயே படகுகளுடன் ஒப்படைக்கப்பட்டனர். இதை  தொடர்ந்து நேற்றிரவு  86 மீனவர்களும் ராமேஸ்வரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்தால் உடன் அழைத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால் கொரோனா பீதி காரணமாக எச்சரித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்….

The post இலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lankan Naval Violation ,Pomban ,Corona ,Panic Rameswaram ,Bach Strait Sea ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...