×

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை என்ற தீர்ப்பில் திருப்தியில்லை :சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பாபர் மசூதி இடிப்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 28 ஆண்டுகளாக நீடித்த பாபர் மசூதி இடிப்பு குறித்த வழக்கை விசாரித்த, லக்னோ சிபிஐ சிறப்பு நீதி மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது, அதில்  பாபர் மசூதி இடிப்பதற்காக சதி திட்டம் தீட்டியதாக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 இந்த தீர்ப்பை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென் சென்னை மாவட்ட தலைவர் ஹபீப் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தீர்ப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது, இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது, என்றார்.

Tags : protests ,Tamil Nadu ,Tawheed Jamaat ,Chennai , Babri Masjid, Liberation, Chennai, Tawheed Jamaat, Demonstration
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...