×

கரூர் அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்தே பிறந்ததால் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அடுத்துள்ள பெரியவரப்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி சரஸ்வதி(32). இவரை, பிரசவத்துக்காக கடந்த 24ம்தேதி அன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். இந்நிலையில், நேற்று காலை குழந்தை இறந்தே பிறந்தது என உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவர்கள் போதிய அளவு சிகிச்சை அளிக்காத காரணத்தினால்தான் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பசுபதிபாளையம் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய உறவினர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Relatives ,baby ,Karur Government Hospital , Karur, Government Hospital, Child
× RELATED வாலிபர் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்