திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி நியமனம்.. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன், ராமகிருஷ்ணன் நியமனம்

சென்னை : தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அவர்களும், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களையும் நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேனி மாவட்டத்தை கழக நிர்வாக வசதிக்காகவும் - கழகப்பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தேனி வடக்கு மற்றும் தேனி

தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

தேனி தெற்கு மாவட்டம்

201. கம்பம்

198. ஆண்டிப்பட்டி

தேனி வடக்கு மாவட்டம்

200. போடிநாயக்கனூர்

199. பெரியகுளம் (தனி)

இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின்அடிப்படையில் தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு ஆகிய மாவட்டக்கழகங்கள் செயல்படும்.

மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்

மேற்குறிப்பிட்டவாறு புதியதாக அமையப் பெற்றமாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.

தேனி தெற்கு மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. கம்பம் என். இராமகிருஷ்ணன்

15/40, ராமையா கவுண்டர் தெரு,

கம்பம் அஞ்சல், உத்தமபாளையம் வட்டம்,

தேனி மாவட்டம்.

தேனி வடக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - திரு. தங்க. தமிடிநடிநடிநடிநச்செல்வன்

93/1, வடக்கு தண்ணீர் தொட்டி தெரு,

நாராயணதேவபட்டி அஞ்சல்,

உத்தமபாளையம் வட்டம்.

தேனி மாவட்டம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி ஆகியோர் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு..

திமுக கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த திரு.ஆ.இராசா, எம்.பி., அவர்கள் துணைப் பொதுச்செயலாளராகவும் - திரு.தங்க.தமிடிநசெல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்களை கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக, ஏற்கனவே கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு.திருச்சி சிவா, எம்.பி., அவர்களுடன் கழக சட்டதிட்ட விதி:18, 19-ன் படி, திரு. திண்டுக்கல் ஐ.லியோனி, திண்டுக்கல்.முனைவர் சபாபதி மோகன், கடலூர் மாவட்டம். ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>