சோத்துப்பாறை அணையின் மதகு பகுதியில் ‘மரண விளையாட்டு’

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. அணையின் கீழ் உள்ள ஆற்றுப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பது வழக்கம். ஆனால் அணையின் மதகு பகுதியில் வாலிபர்கள் சிலர் குளிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.வீடியோவில், அணையின் மதகு பகுதியில் வரிசையாக ஏறி வாலிபர்கள் நிற்கின்றனர். பின்னர் தண்ணீர் விழும் மதகில் இருந்து சறுக்கி கீழே வருகின்றனர். இந்த வீடியோ தற்போது தேனி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அணையின் நீர் வெளியே வரும் மதகு பகுதி மிகவும் ஆபத்தான இடமாகும். வழுக்கியோ, தவறியோ விழுந்தால் சிக்கல் தான். எனவே அங்கு பெரும்பாலும் யாரும் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. சோத்துப்பாறை அணை மதகு பகுதியில் வாலிபர்கள் சறுக்கி குளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு குளிக்கும் இளைஞர்களை பொதுப்பணித்துறையினர் கண்டித்து வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் உயிர்ப்பலி ஏற்பட்டுவிடும்’’ என்றனர்.

Related Stories:

>