×

புனேவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைப்பு

மகாராஷ்டிரா: புனே அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பெருட்கள் கருகின. மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் சாலையில் குர்கும்ப் தொழில் வளாகம் உள்ளது. இங்குள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென ஆலையின் அனைத்து இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் தொழிற்சாலையை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பொருட்கள் எரிந்துவிட்டதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : factory ,struggle ,Pune , Pune, chemical factory, terrible, fire accident
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...