×

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ,அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை.!!!

சென்னை:  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தியுள்ளார்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்க்கும் வகையில்,  சென்னை அடையாறில்  2.80 கோடி செலவில் 2,124 சதுர அடியில்  அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம் கடந்த 2017-ம் ஆண்டு சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள  அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர்  தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவாஜி கணேசன்  பேரனும், நடிகருமான விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து சிவாஜி கணேசன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Tags : Tilak Shivaji Ganesan ,O. Panneerselvam ,Birthday ,Ministers , Actor Tilak Shivaji Ganesan's 93rd Birthday: Deputy Chief Minister O. Panneerselvam and Ministers pay floral tributes. !!!
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி.வி....