முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ்தாஸ் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம்: உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ்தாஸ், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக விஜயகுமார் பதவி வகித்து வந்தார். அவர் நேற்று ஓய்வுபெற்றார். அதைதொடர்ந்து டிஜிபி அந்தஸ்தில் இருந்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி லஞ்ச ஒழித்துறை கூடுதல் டிஜிபியாகவும், அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதில் ராஜேஷ்தாஸ், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், தற்போது வணிக வரித்துறை செயலாளருமான பீலா ராஜேஷின் கணவராவர். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ராேஜஷ் தாசும், லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளியும் நேற்று பிற்பகல் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Related Stories:

>