×

ஏரிக்கரையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூர் ஏரிக்கரையில் கஞ்சா விற்பதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தப் பகுதிக்கு சென்ற போலீசார் ஏரிக்கரையில கஞ்சா விற்ற வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதைத் தொடர்ந்து வாலிபரை கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர். விசாரணையில் அண்டவாயில் பகுதியை சேர்ந்த விஜய் (23) என தெரியவந்தது. பின்பு அவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : lake , Man arrested for selling cannabis on lake
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது