×

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 969 எஸ்.ஐ பணிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது: தேர்வர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம்

சென்னை: காவல் துறையில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஜனவரி மாதம் 12,13 ஆகிய தேதிகளில் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் எழுதினர். அதில் 5,500 பேர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றனர்.அதைதொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று முதல் வரும் 12ம் தேதி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த உடற்தகுதி தேர்வுக்கு நாள் ஒன்றுக்கு 600 பேர் வீதம் அழைக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கான அழைப்பாணைகளும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் அழைப்பாணை அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி தகுதி தேர்விற்கு கலந்து கொள்ளும் போது, கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. அதைதொடர்ந்து நேற்று காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உடல் தகுதி தேர்வு தொடங்கியது. அப்போது கலந்து கொள்ள வந்த அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் கலந்து கொண்ட நபர்களுக்கு 400 மீட்டர், 1200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதைதொடர்ந்து நீளம் தாண்டுதல், கயிர் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றது. போட்டில் கலந்து ெகாண்ட அனைவரும் கொரோனா பரிசோனை செய்து சான்றுடன் வந்திருந்தனர்.

Tags : Fitness test ,ground ,Egmore Rajaratnam ,Corona ,selectors , Fitness test for 969 SI posts started at Egmore Rajaratnam ground: Corona negative certificate required for candidates
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி