×

விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை: 1000 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது: விவசாயிகள் வேதனை

விருத்தாசலம்:  கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால்,  700 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.  சிறு, குறு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.10  ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து, நடவு பணியை மேற்கொண்ட நிலையில், ஒரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால், செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

இதுபோல் கம்மாபுரம் பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கியுள்ளது. குணமங்கலம் ஊராட்சியில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி 100 ஏக்கர் அளவு சேதம் ஏற்பட்டுள்ளது.   உரிய நிவாரண தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Vidya ,paddy fields , Vidya, Vidya pours heavy rains: 1000 acres of paddy fields submerged in water: Farmers suffer
× RELATED வீரப்பன் மகளுடன் பாமகவினர் வாக்குவாதம்