திருப்பூரில் அசாம் பெண் கூட்டு பலாத்காரம்: 3 பேர் கைது

பொங்கலூர்: திருப்பூரில் அசாம் மாநில பெண்ணை 6 பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். அவர்களில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் தோகா (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். அவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் குங்குமம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (25) என்பவரை வேலைக்காக அணுகினார். இதற்காக கடந்த 28ம் தேதி பல்லடம் அருகே அருள்புரத்திற்கு பஸ்சில் தோகா சென்றார். அப்போது தோகா தனக்கு மது வேண்டும் என கேட்டுள்ளார். உடனே ராஜேஸ்குமாரின் நண்பர் தமிழ் மது வாங்கி வந்து கொடுத்தார். பிறகு தமிழும், தோகாவும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பிறகு தோகாவை தமிழ் தனது பைக்கில் ஏற்றி அன்று இரவு பஸ் ஸ்டாண்ட் சென்றதாக தெரிகிறது.  இந்நிலையில் பல்லடம் அருகே கள்ளிமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் கதவை தட்டி அங்குள்ளவர்களை தோகா எழுப்பி வீட்டில் இருந்தவர்களிடம், ‘தன்னை 6 பேர் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து தன்னிடமிருந்த பணம், செல்போனைப் பறித்துக் கொண்டு விரட்டி வருகிறார்கள்’ என தெரிவித்தார்.  இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் விரைந்து சென்று தோகாவை மீட்டனர். பின்னர் ராஜூ (23), அன்புசெல்வன் (22),  கவின்குமார் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>