×

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் சேதமடைந்த பைபாஸ் சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பைபாஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும், கார் மற்றும் டூவீலர்களும் அதிகளவில் செல்கின்றன. உரிய பராமரிப்பில்லாததால் தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : road , Request to repair damaged road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...