பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக விளக்கினார் செரீனா வில்லியம்ஸ்

வாஷிங்டன்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரிலிருந்து அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகினார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மைச் சுற்று கடந்த 27-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டி அன்-ஐ எதிர்கொண்டார். இதில் செரீனா 7(7)-6(2), 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இன்று 2-வது சுற்றில் பல்கேரியா வீராங்கனை பிரோன்கோவை எதிர்கொள்ள இருந்தார். இந்நிலையில் குதிகால் காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். செரீனா ஜமீக்கா வில்லியம்ஸ்(26) முன்னாள் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார்.

39 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவர் வீனஸ் வில்லியம்ஸின் தங்கை ஆவார். மகளிர் டென்னிஸ் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் ஒற்றையர் ஆட்டத்தில் முதல் நிலையை ஏழு முறை எட்டியவர். முதன்முதலாக முதல் நிலையை சூலை 8, 2002 இல் பெற்றார்; ஏழாவது முறையாக சனவரி 30, 2017இல் எட்டினார். செரீனா கிராண்ட் சிலாம்களில் 39 பட்டங்களைப் பெற்றது சாதனையாகும். 23 ஒற்றையர் பட்டங்கள், 14 இரட்டையர் பட்டங்கள், இரண்டு கலப்பினப் பட்டங்கள். நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களையும் ஒரே நேரத்தில் வென்ற ஐந்தாவது பெண் சென்னிஸ் ஆட்டக்காரராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தங்கை வீனசு வில்லியம்சுடன் இரட்டையர் ஆட்டத்தில் ஒரேநேரத்தில் நான்கு கிராண்ட் சிலாம் பட்டங்களைப் பெற்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இவர் ஒற்றையர் ஆட்டங்களில் 23 கிராண்ட் சிலாம் வெற்றிகளைப் பெற்றது இவரை ஆறாம் இடத்தில் வைத்துள்ளது.[3] செப்டம்பர் 10, 2012 இல் மகளிர் டென்னிசு சங்கம் கூட்டமைப்பின்படி இவரின் தர வரிசை நான்கு ஆகும் [4], இரட்டையரில் இவரின் தரவரிசை 35 ஆகும்.[5]

செரீனா வில்லியம்ஸ் இரட்டையர் ஆட்டங்களில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.[6] ஒற்றையர் ஆட்டத்தில் ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் [7]. மற்றெந்த பெண் விளையாட்டாளரை விட மிகக் கூடுதலான பணிவாழ்வு பரிசுத்தொகை வென்றுள்ளார்.[8] தமது தமக்கையுடன் 1998ஆம் ஆண்டு முதல் 23 முறை நேரடியாக விளையாடி 13 முறை வென்றுள்ளார். இவற்றில் எட்டு கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டிகளில் ஆறில் வென்றுள்ளார். ஆறு ஆஸ்திரேலிய ஓப்பன் ஒற்றையர் பட்டங்களைப் பெற்ற ஒரே விளையாட்டாளராக, ஆண்/பெண் இருவரிலும், உள்ளார்.

Related Stories: