மக்களவை தலைவர் ஓம் பிர்லா தந்தை மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லா தந்தை கிருஷ்ணா பிர்லா மறைவிற்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் தந்தை ஸ்ரீகிருஷ்ணா பிர்லா வயது 92. அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று ஸ்ரீகிருஷ்ணா பிர்லா காலமானார். ஸ்ரீகிருஷ்ணா பிர்லாவின் இறுதி சடங்கு இன்று நடந்தது. கோட்டாவில் உள்ள கிஷோர்புரா தகன மைதானத்தில் ஸ்ரீகிருஷ்ணாவின் இறுதி சடங்கு நடந்தது.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அதன்படி கிருஷ்ணா பிர்லா மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தந்தை கிருஷ்ணா பிர்லா மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். ஓம் பிர்லா அவர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>