×

தென்னிலையில் இருந்து நெரூர் வரை செல்லும் பாசன வாய்க்காலில் புதர் மண்டி கிடக்கும் அவலம்

கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் இருந்து நெரூர் வரை செல்லும் பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் உள்ள ஆத்துப்பாளையம் தடுப்பணை பகுதியில் இருந்து நெரூர் பகுதி வரை பாசனத்துக்காக வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் தடுப்பணை பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் இந்த வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முற்றிலும் கிராமங்களின் வழியாக வரும் இந்த பாசன வாய்க்காலின் பல்வேறு பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதோடு மோசமான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாசன வாய்க்காலின் அனைத்து பகுதியையும் பார்வையிட்டு சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : irrigation canal ,Nerur , Karur, Irrigation Canal
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்