நெய்வேலி என்.எல்.சி. முதலாவது அனல் மின்நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிப்பு

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. முதலாவது அனல் மின்நிலையம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1962-ல் சோவியத் ரஷ்யா தொழில்நுட்பத்துடன் தெற்காசியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட அனல் மின் நிலையம் இது. இதில் 600 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்து. மேலும் இந்த அனல் மின் நிலையத்துக்கு 25 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உலக அளவில் ஒரு அனல் மின் நிலையம் 20 ஆண்டுகளுக்கு மட்டுமே இயங்க வேண்டும் என விதி உள்ளதால், நெய்வேலி முதலாவது என்.எல்.சி அனல் மின் நிலையத்தை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது.  இதனால் நெய்வேலி என்.எல்.சி முதலாவது அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது அனல் மின்நிலையம் மூடுவதால் ஏற்படும் மின் இழப்பை ஈடு செய்யும் வகையில், புதிய அனல் மின் நிலையம் தொடங்கி செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் முதலாவது அனல் மின்நிலையம் ஆயுட்காலம் முடிவடைந்து மூடப்பட்டதால் அதில் உள்ள தொழிலாளர்கள் மற்ற அனல் மின் நிலையத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>