×

கொரோனாவில் இருந்து உலகை காப்பாற்ற வேண்டி உடலில் விளக்குகளுடன் தவில் வாசித்த கலைஞர்

பழநி: கொரோனாவில் இருந்து உலகை காப்பாற்ற வேண்டி பழநியில் உடலில் விளக்குகளுடன் நாட்டுப்புற கலைஞர் தவில் வாசித்து வழிபாடு செய்தார். கொரோனாவல் கடந்த 6 மாதத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகில் உள்ள உயிரினங்கள் கொரோனாவில் இருந்து பூரண நலம்பெற்று வாழ வேண்டி பழநியில் தவில் கலைஞர் உடலில் விளக்குகள் ஏற்றி நூதன வழிபாடு மேற்கொண்டார். பழநி அடிவாரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. தவில் கலைஞர். நேற்று பழநி புறநகர் சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மயிலாடும்பாறையில் உள்ள கருப்பணசுவாமி கோயிலில் தனது உடலில் தனது தலை மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் 11 விளக்கு தீபங்கள் ஏற்றியபடி தவில் வாசித்தார்.

இவருடன் நாட்டுப்புற கலைஞர்களான மகாமணி, சுருளிவேல், நடராஜன், முனியாண்டி, ராஜேந்திரன் மற்றும் கீர்த்திவாசன் ஆகியோர் தவில் மற்றும் நாதஸ்வரம் வாசித்தனர். உலக நலனுக்காக நாட்டுப்புறக் கலைஞர்களின் நூதன வழிபாடு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : artist ,world , Corona, thavil
× RELATED சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!