சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பாஜ பக்கம் வந்தால் பதவி : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே யோசனை

மும்பை, :மகாராஷ்டிராவில் எதிர்கட்சியாக உள்ள பாஜகவுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க வேண்டும் என ராம்தாஸ் அத்வாலே யோசனை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்கட்சியாக பாஜக உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து, மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மகாராஷ்டிராவில் பாஜகவும், சிவசேனாவும் இணைந்தால் தற்போது முதல்வராக இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஓராண்டுக்கும்,

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசும் முதல்வராக இருக்கலாம். பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைக்காவிடில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். அவ்வாறு சரத்பவார் தேசிய ஜனநாய கூட்டணியில் இணைந்தால் அவருக்கு பெரிய பதவி வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>