மேல்மலையனூர் அருகே மயான பாதை இல்லை எனப் புகார்.: வயல்வெளி வழியாக சடலத்தை சுமந்து செல்லும் மக்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மயான பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக கிராம மக்கள் இறந்தவர்களின் சடலத்தை சுமந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நதி ஓரம் சுடுகாடு அமைந்துள்ளது.  

இவர்களுக்கு கிராமப்புறம் வழியாக இறந்தவர்களின் சடலத்தை எடுத்து செல்ல கடும் எதிர்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் சடலத்தை வயல்வெளி வழியாக எடுத்து செல்ல உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மயானத்துக்கு பாதை அமைத்து தர பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் நிரந்தர சுடுகாட்டு பாதை அமைத்து தர மேல்மலையனூர் கிராம மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் மயான பூமி அமைத்து தரவும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>