திடீரென இடி தாக்கி டிவி உள்பட மின்சாதன பொருட்கள் பழுது

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி பரவலாக விட்டு, விட்டு மழை பெய்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம், கொக்கிலமேடு, பூஞ்சேரி, வடகடம்பாடி, பையனூர், திருவிடந்தை, வடநெம்மேலி உள்பட பல்வேறு கிராமங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால், மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின்போது, இடி தாக்கியதில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென மின் அழுத்தம் அதிகமாகி, அங்கிருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, பிரிட்ஜ் உள்பட பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன. இதனால், பொதுமக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories: