×

சிறைத்துறை காவலர் கொலை வழக்கு: தஞ்சை கோர்ட்டில் 5 வாலிபர்கள் சரண்

சென்னை: செங்கல்பட்டில் சிறைத்துறை காவலர் கொலை வழக்கு தொடர்பாக தஞ்சை கோர்ட்டில் 5 வாலிபர்கள் நேற்று சரணடைந்தனர். செங்கல்பட்டு அடுத்த பழையசீவரம் பெரிய காலனியை சேர்ந்தவர் இன்பரசு(29). சென்னை புழல் சிறையில் சிறைத்துறை காவலராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் மதியம் பைக்கில் பழையசீவரம் ரயில்வே கிராஸ் அருகே வந்தபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் சம்பவ இடத்திலேயே இன்பரசு பலியானார்.
இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில் குடும்ப பகை காரணமாக இன்பரசுவின் நெருங்கிய உறவினர் வரதராஜன் என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய பழையசீவாரத்தை சேர்ந்த வரதராஜன்(30). செந்தில்(27). ஜான்சன்(23). ராஜதுரை(29). விக்னேஷ்(24) ஆகிய 5 பேர், தஞ்சை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி மோசஸ் செபாஸ்டின், 5 பேரையும் வரும் 5ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு செல்லப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : youths ,court ,Tanjore , Prison guard murder case: 5 youths surrender in Tanjore court
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...