×

வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு: அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: உத்தரபிரதேச மாநிலத்தில், மின்சார துறை தனியார்மயமாக்கலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை, உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி, வடசென்னை அனல் மின்நிலையத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மின்வாரியம் தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, அம்மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அகில இந்திய தொழிற்சங்க தலைவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர்களை  உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும்  மின் ஊழியர்கள் முதல்கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில், சிஐடியு தலைவர் ஜெயவேல் தலைமையில்  உத்தரப்பிரதேச அரசு  உடனடியாக தொழிற்சங்க தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். மின்சார சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தொமுச செயலாளர் ராமமூர்த்தி, பொறியாளர் கழகம் ஆனந்தன், இன்ஜினியர் யூனியன்  செயலாளர் விநாயகம், இன்ஜினியர் சங்கம் செயலாளர் பாலகிருஷ்ணன், ஐஎன்டியூசி செயலாளர் தாமோதரன், சிஐடியு மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட் ஐயா, கிளை செயலாளர்கள்  வெங்கடேசன், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : North Chennai Thermal Power Station ,All Trade Unions Demonstration , North Chennai Thermal Power Station Formerly: All Trade Unions Demonstration
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு