×

தென் மாவட்டங்களில் முகாம் அங்கொட லொக்காவின் நண்பருக்கு சிபிசிஐடி வலை: கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனையா?

மதுரை: இலங்கையின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா. சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்து பல்வேறு பகுதிகளில் தங்கி இருந்ததாகவும், கடந்த ஜூலை மாதம் கோவையில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் உடல் மதுரை தத்தநேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது காதலி, நண்பர் மற்றும் மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமசுந்தரி ஆகிய 3 பேரை ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கொட லொக்கா தனது  துப்பாக்கியை அவருடைய நண்பர் சனுக்காவிடம் கொடுத்து வைத்ததாகவும், அவர் மதுரையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து மதுரையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனுக்காவை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் போலியான ஆவணங்கள் தயாரிக்க உறுதுணையாக இருந்த முகவர் ஒருவரையும் தேடி வருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, அங்கொட லொக்காவிற்கு உதவிய வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் அவருடைய உறவினர் வங்கிக்கணக்கையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags : Angoda Lokka ,CBCID ,districts , CBCID web for a friend of camp Angoda Lokka in the southern districts: Money in crores?
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...