பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் நடால்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில்  பெலாரசின் இகோர் ஜெரசிமோவுடன் (83வது ரேஙக்) மோதிய நடால் (2வது ரேங்க்) 6-4, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2மணி, 5 நிமிடங்களுக்கு நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில்  ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் (3வது ரேங்க்),  குரேஷிய வீரர் மரின் சிலிச்சுடன் (40வது ரேங்க்) மோதினார். 2 மணி நேரம் நீடித்த இப்போட்டியில்  தீம் 6-4, 6-4, 6-3 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்  அமெரிக்க வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ் (6வது ரேங்க்) - கிறிஸ்டி ஆன் (102வது  ரேஙக்) மோதினர். வெற்றிக்காக இருவரும் கடுமையாகப் போராட, முதல் செட்  டை பிரேக்கர் வரை நீண்டது. அதில் செரீனா 7-6 (7-2) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர் 6-0 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: