×

வணிகர்களின் கோரிக்கையை தமிழக அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: விக்கிரமராஜா வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை. கொரோனா பேரிடர் கால தளர்வுகளுக்கு பின்னரும் வணிகர்களின் ஒருசில கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளது. சில்லரை, மொத்த காய்கறி வணிகத்தையும், மொத்த சில்லரை பழ வணிகத்தையும், மலர் வணிகத்தையும் மீண்டும் கோயம்பேடு சந்தையில் இயங்குவதற்கான அனுமதியை உடனடியாக அளிக்க வேண்டும். பொருட்கள் ஆர்டர் செய்வதற்காக வருகின்ற இருசக்கர வாகனங்களை அனுமதித்திடவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செப்டம்பர் 30ம் தேதியோடு பேரிடர்கால சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வர இருக்கின்றன. இதனை மேலும் நீட்டித்திடாமலும், இன்னும் இயக்கத்திற்கு வராத திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் திறப்பு போன்ற இதர துறைசார்ந்த தொழில்களையும் மீண்டும் துவக்கி, நடைபெற அரசு துணை செய்ய வேண்டும். வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதித்திட வேண்டும். மலர் அங்காடி வணிகர்களிடமே, அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காலி இடத்திற்கு வாடகையும், முன்பணமும் செலுத்தக்கோரியது மிகுந்த மன அழுத்தத்தையும், மனச்சுமையோடு பணச்சுமையையும் அளிப்பதாக இருந்தது.  எனவே, வாடகையை தள்ளுபடி செய்து, முன்வைப்புத்தொகையையும் திருப்பி அளிக்க வேண்டும்.


Tags : Government ,traders ,Tamil Nadu ,Wickramarajah , Government of Tamil Nadu should reconsider the demand of traders: Wickramarajah's request
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...