கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

சென்னை: கொரோனா தொற்று தேமுதிக நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 22ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை அறிக்கை: பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த செப்டம்பர் 28ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு செப்டம்பர் 29ம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். பிரேமலதா விஜயகாந்த்தின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. தொடர் மருத்துவச் சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறார்.

Related Stories:

>