கேரளாவில் பரபரப்பு; முதல்வர் பினராயி விஜயனுக்கு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் செல்போன் எண்ணுக்கு நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. போனின் எதிர்முனையில் பேசியவர் கரகரக்கும் குரலில் பேசினார். திடீரென முதல்வருக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து உடனடியாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கமிஷனரின் உத்தரவின்பேரில் போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கினர். விசாரணையில் காயங்குளத்தில் இருந்து போன் அழைப்பு வந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது 3 நாளுக்கு முன்பு செல்போன் தொலைந்து விட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட நபரும் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதல்வர் பினராயி விஜயனுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

>