×

திட்டக்குடி பகுதியில் உர தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திட்டக்குடி: திட்டக்குடியில் உரம் வாங்குவதற்காக உரக்கடைக்கு குவிந்த விவசாயிகள் போதிய அளவில் உரம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அரசு இப்பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் கடந்த ஆடிப்பட்டத்தில் போது விவசாயிகள் தங்களது நிலத்தில் மானாவாரி பயிரான சோளம், பருத்தி, வரகு, நெல் உள்ளிட்ட பயிறு வகைகளை பயிர் செய்துள்ளனர். பயிர் செய்த நாட்களிலிருந்து இடையில் போதிய மழை இன்றி விவசாயிகள் தவித்தனர். இந்நிலையில் திடீரென நேற்று இரவு பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திட்டக்குடி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த பயிருக்கு வகைகளுக்கு உரம் வாங்குவதற்காக உர கடையில் குவிந்தனர். ஆனால் சில உரக்கடைகளில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே உரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் உரம் வாங்க வந்த விவசாயிகள் உரம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். உரங்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடும் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திட்டக்குடி நகர தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது ஆனால் அங்கு விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தனியார் கடைகளுக்கு உரம் வாங்க வந்தனர். ஆனால் அங்கும் உரம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிய விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி மீண்டும் எப்போது உரம் வருமோ என்று புலம்பியபடியே சென்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : area ,Tittakkudi ,Government , Farmers suffer due to shortage of fertilizer in Tittakkudi area: Government demands action
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...