சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இவ்விழாவின் 10-ம் நாள் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 29-ம் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த விழாவிற்காக பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கியது.

பின்னர் காலை 6.30 மணிக்கு ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசையும் பந்தக்காலிற்கு தீபாராதனை காணப்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகர், உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, நகர்புற வங்கித் தலைவர் குணசேகரன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: