×

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் காட்டை விட்டு வெளியேறிய கருஞ்சிறுத்தையால் மக்கள் பீதி

சின்னமனூர்: ஹைவேவிஸ் மலைப்பகுதியில் முதல்முறையாக கருஞ்சிறுத்தை வெளியே வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு உள்ளிட்ட ஏழு மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் சிறுத்தை, யானை, கரடி, காட்டு எருமை, மான், குரங்கு, சிங்கவால் குரங்கு, அரிய வகை பாம்புகள், பறவை இனங்கள் உள்ளன. இதனால் இப்பகுதி வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட இடமாக உள்ளது.

வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் அடிக்கடி தேயிலை, ஏலம், காபி தோட்டங்களில் வலம் வருவது வழக்கம். இந்நிலையில் முதல் முறையாக கருஞ்சிறுத்தை ஒன்று நேற்று மக்களின் கண்களில் தென்பட்டது. ஹைவேவிஸ் - மேகமலை இடையே அணை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று கருஞ்சிறுத்தை ஒன்று தேயிலை செடிகளை கடந்து சென்றது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags : forest ,Highways Hills , Hillside, Black Leopard
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...