×

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது

சென்னை: நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் ‘திரைப்பட நடிகர் சூர்யா நடத்தி வரும் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும்’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். உடனே இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ் என்ற இளைஞரை போலீஸ் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Surya , Cat Q, Chinese Virus, India, Mosquitoes, ICMR, Virology, Laboratory, Warning...
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்