×

தெற்கு ரயில்வேயில் கூடுதல் பொது மேலாளர் நியமனம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கூடுதல் பொது மேலாளராக  பதவி வகித்துவந்த  மிஸ்ரா,  கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து முதன்மை தலைமை பண்டக மேலாளர் சண்முகராஜ்,   கூடுதல் பொது மேலாளர் ஆக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் 2004ம் ஆண்டில் மதுரையில் பணியாற்றிய முதுநிலை கோட்ட மின் பொறியாளர் பி. ஜி.  மல்லையா,  தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொது மேலாளர்  ஆக நேற்று பதவி ஏற்றார்.

தென்மேற்கு ரயில்வேயில் முதன்மை தலைமை மின் பொறியாளராக பணியாற்றியவர் தற்போது  இந்த புதிய பதவிக்கு வந்துள்ளார். நெதர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான்,   பிரான்ஸ், தென் கொரியா, சீனா, ஈரான், சுவிட்சர்லாந்து மற்றும் பங்களாதேஷ்  ஆகிய நாடுகளுக்கு ரயில்வே பணிகளுக்காக சென்ற அனுபவம் கொண்டவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Tags : General Manager ,Southern Railway , Appointment of Additional General Manager, Southern Railway
× RELATED தெற்கு ரயில்வேக்கு கூடுதல் பொதுமேலாளர்