சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு தொற்று: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள் பலர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் நிலையில், திமுக எம்எல்ஏக்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிகவும் பாதுகாப்பான முறையில் களப்பணியில் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்நிலையில், சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து, மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி கல்பனாவும் பரிசோதனை செய்துகொண்டனர்.

 பரிசோதனை முடிவில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததால் பரிசோதனைக்கு பின்பு இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கந்தன்சாவடியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கான பணிகளை செய்து வந்தார். இதில் கலந்து கொள்ள இருந்த நிலையில், கொரோனா உறுதியானதால் அவர் கலந்து கொள்ளவில்லை.

Related Stories:

>