×

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை தொடக்கம்: தன்னார்வலர்கள் 2 பேருக்கு செலுத்தப்பட்டது

சென்னை: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. 2 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. உலகத்ைதயே முடக்கி ேபாட்டுள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனையில் உள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரை சேர்ந்த சீரம் நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள, ‘கோவிஷீல்டு’ என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது.

கடந்த மாதம், கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை சீரம் நிறுவனம் பெற்றது. இதையடுத்து, சீரம் நிறுவனத்திற்கு மனிதர்களிடம் 2ம் மற்றும் 3ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 17 நகரங்களிலும் இந்த தடுப்பு மருந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் சுமார் 1,600 பேரிடம் சோதனை நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஒரு மருத்துவமனையில் 100 முதல் 120 பேர் என்ற அடிப்படையில் 300 பேரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் இயக்குனர் இதன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை பக்கவிளைவுகளை ஏற்படுத்திய காரணத்தால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸ்போர்ட் நிறுவனம் அறிவித்தது. கடந்த வாரம் இந்த சோதனையை மீண்டும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 300 தன்னார்வலர்களுக்கு செலுத்த அனுமதி பெறப்பட்டது. இதன்படி சென்னையில் கோவிஷீல்டு பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

Tags : vaccination test ,Govshield ,Rajiv Gandhi Hospital ,Chennai ,volunteers , Govshield vaccination test started at Rajiv Gandhi Hospital, Chennai: 2 volunteers were paid
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...